Kasi Viswanathar Temple Thirukanchi Pondicherry / Thirukanchi temple history in tamil /ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் திருக்காஞ்சி கோவில்
திருக்காஞ்சி திருப்பதிகம்
அத்தர் முத்தர் சித்தரரெலா மனுதினஞ்சூழ் அம்பலமா யோங்குதிருக் காஞ்சிதனில்
பக்தகோடிகளும் மூழ்கிப் பதம்பெறவே பரவிவரும் வராக நதிக்கரையதனில்
சக்தியகங்க வராக நதீஸ்வரானார் சாம்ராஜ்ய மீனாட்சி காமாட்சியோடு
உற்றவாலய மதனில் ஓங்காரமாய் ஓதரருமகஸ்தியர் தவமுனனிவரெல்லம்
ஓதிடவே லிங்கமதாய் நின்றவேத ஓமென்ற மந்திரத்த ளொளிக்குஞ்ஜோதி
பூதலத்தி லஸ்தியதை புஷ்மகாக பூவார்கண் டதிசயக்கச் செய்தபுண்ய
ஸ்ரீதரனே வடகாசி மேலேவீசற்சேவிப்பவர் சிவலோக மெனவே வேண்ட
போதகனே கங்கையணி பரமஞான பொற்பதமே பொன்னடித்தாள் போற்றுவோமே.
Famous temples in Pondicherry
- புதுச்சேரி மாநகரில் புகழ்பெற்று விளங்கும் இத்திருக்காஞ்சி புண்ணியத்திருத்தலமாகும்.
Thirukanchi temple history
- புண்ணியம் சேர்ப்பதில் "காசியை விட வீசம் அதிகம்" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
- செஞ்சியாறு, கிளிஞ்சியாறு, வராகநதி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சங்கராபரணியே இந்த ஆலயத்தின் முக்கிய தீர்த்தமாகும்.
- அந்தணர் ஒருவர் கொண்டுவந்த அஸ்தியை பூக்களாய் மாறிய அதிசயம் நிகழ்ந்த இடமும் இத்திருக்காஞ்சியேயாகும்.
- செஞ்சி பகுதியில் உற்பத்தியாகும் இந்நதி மேற்கிலிருந்து கிழக்காக வருகின்ற வழியில் இத்திருக்காஞ்சித் திருத்தலத்தருகில் உத்ரவாகினியாக வடக்கு நோக்கித் திரும்பி பின்னர் கிழக்கே சமுத்திரரத்துடன் சங்கமிக்கிறது.
- இவ்வாறு கிழக்கே கடலில் கலக்கும் நதி வடக்காக திரும்புவது மிகவும் அரிதான ஒரு நிகழ்ச்சியாகும்.
- இவ்வாறு வடக்கே திரும்பும் இடமான திருக்காஞ்சி ஒரு புண்ணியத் திருத்தலாமாக கங்கை நதியினும் மேலான சிறப்பு பெற்று விளங்குகிறது.
- இந்த தீர்த்தத்தின் புனிதத் தன்மை கண்டே காசி, இராமேஸ்வர புனித யாத்திரை உடன் இத்திருக்காஞ்சியையும் கூறுகின்றனர்.
- ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தப்பெறும் மாசி மகத் திருவிழாவில் நீத்தார் நினைவுக்கடன் செய்வது மிக முக்கியமான நிகழ்ச்சி ஆகும்.
- அந்நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும் எத்தைகைய பாவ உயிர்களும் நேராக மோட்சத்திற்குச் செல்வதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
- அதனால் தான் புண்ணியத்தில் சிறந்தபதியான இத்திருத்தலத்தை "காசியை விட வீசம் அதிகம்" என்று கூறுகின்றனர்.
- இக்கோயிலின் மூலவர் கங்கை வராக நதீஸ்வரர் என்றழைக்கப்படுகின்ற இப்பெரிய லிங்கம் பதினாறு பட்டைகளை கண்கொண்டு, பதினாறு செல்வங்களையும் அருளக்கூடிய இம்மாதிரியான லிங்கங்கள் அபூவர்மானவையாகும்.
திருக்காஞ்சி வரலாறு
பழமை வாய்ந்த கோவில் :
- இவ்வாலய சிவலிங்கம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
- ஸ்ரீ அகஸ்தியர் தனது திருக்கரத்தால் பூஜித்ததும் , ஸ்ரீ ராகு , ஸ்ரீ கேது பூஜித்ததும் இத்திருத்தல சிவலிங்கமே ஆகும்.
- ஸ்ரீ வராக பெருமாள் திருவருளால் உத்திரவாஹினியாக நதி அருளப்பெற்ற தலம்.
- ஸ்ரீ காமாக்ஷி ஸ்ரீ மீனாக்ஷி என இரண்டு அம்பிகையோடு கூடிய இத்தலத்தை வழிபட்டால் தடைபட்ட சுபகாரியங்கள் உரிய நேரத்தில் நடைபெறும்.
- இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்து சகல வியாதிகளையும் போக்கும் சத்யோஜாத மூர்த்தியாக அருளுகிறார்.
- ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ ஓதர் மற்றும் ஸ்ரீ ராமபிரான் ஆகியோர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டுள்ளனர்.
- முன்னோர்கள் சாபம் நீக்கி, நீண்ட ஆயுளும், 16 செல்வங்களும், நோயற்ற வாழ்வையும் தரும் அற்புத ஸ்தலம்.
Comments
Post a Comment